சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமழிசை சந்தையில் போலி இன்ஸ்பெக்டர் கைது

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

திருமழிசை : திருமழிசை தற்காலிக சந்தையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறி மிரட்டியவரை, போலீசார் கைது செய்தனர்.

வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் இயங்கி வருகிறது தற்காலிக காய்கறி சந்தை. இங்கு, நேற்று முன்தினம் காலை, 60 வயது மதிக்கத்தக்க முதியவர், தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறி, வியாபாரிகளிடம், காய்கறிகளை இலவசமாக தர வேண்டும் என, கேட்டுள்ளார்.தகலறிந்த வெள்ளவேடு தலைமைக் காவலர் வேலாயுதம் சென்று விசாரித்த போது, அந்த முதியவர், தலைமைக் காவலரை தண்ணியில்லா காட்டிற்கு மாற்று விடுவேன் என கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து, வெள்ளவேடு போலீசார், அந்த முதியவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை, மகாகவி பாரதியார் நகரைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ஆம்ரோஸ், 60, என்பது தெரிய வந்தது.இதுகுறித்து, வெள்ளவேடு போலீசில், தலைமைக் காவலர் வேலாயுதம் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, முதியவரை கைது செய்து, அவர் கொண்டு வந்த 'பஜாஜ் பிளாட்டினா' இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X