சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பாதித்த ஓட்டுனர் உட்பட 2 பேர் பலி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை : சென்னையில் தொற்று பாதித்த ஆட்டோ ஓட்டுனர் உட்பட இருவர், பரிதாபமாக பலியாகினர்.

சென்னை, சோழிங்க நல்லுார் மண்டலம், 196வது வார்டு, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த, 55 வயது ஆட்டோ ஓட்டுனருக்கு, சில நாட்களுக்கு முன் காய்ச்சல் பாதித்தது. மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு, பரிசோதனை செய்ததில், தொற்று இருந்தது.அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று, சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து, அவர் வசிக்கும் தெருவில், சுகாதார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

 சென்னை அடுத்த தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த, 68 வயது காய்கறி வியாபாரிக்கு, கடந்த, 8ம் தேதி, தொற்று உறுதியானது. செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று திடீரென மயங்கி விழுந்து, அங்கேயே உயிரிழந்தார்.

தாம்பரம் நகராட்சியில், நேற்று முன்தினம் வரை, கொரோனா தொற்று பாதித்து, ஐந்து பேர் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று ஒருவர் இறந்ததால், பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X