சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3,500 மது பாட்டில்கள் நசரத்பேட்டையில் பறிமுதல்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

பூந்தமல்லி : பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சோதனை சாவடியில், இதுவரை, 3,500 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

கொரோனோ தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில், 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், சென்னையைச் சேர்ந்த மது பிரியர்கள், எல்லை விட்டு, எல்லை சென்று, மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். சிலர், மதுபாட்டில்களை வாங்கி சென்று, அதிக விலைக்கு விற்கின்றனர்.இதை தடுக்க, பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலையில், நசரத்பேட்டை அருகே சோதனை சாவடி அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர். அங்கு தினமும், 200 முதல், 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அவ்வாறு, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதை பார்க்கும்போது, காவல் நிலையம், டாஸ்மாக் குடோன் போல் காட்சியளிக்கிறது.இந்நிலையில், இதுவரை பிடிபட்ட மதுபாட்டில்களை, போலீசார், நேற்று முன்தினம், காட்சிக்கு வைத்தனர். அதில், ரக ரகமான மதுபாட்டில்கள் இருந்தன.ஒரு மாதத்தில் மட்டும், 3,500 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாவும், அவை அனைத்தும், நீதிமன்றம் உத்தரவுப்படி அழிக்கப்படும் என்றும், போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X