சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு பாட்டில் குத்து: போதை நண்பர்கள், 'வெறி'

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

அண்ணாசாலை : போதையில், வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய இருவரை, கைது செய்த போலீசார், தப்பிச் சென்றவரை தேடி வருகின்றனர்.

சென்னை, அண்ணாசாலை, ஜானி பாட்ஷா தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 28. இவர், நேற்று முன்தினம் மாலை, செல்ல பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி மைதானத்தில், நண்பர்கள் மூவருடன் மது அருந்தினார்.அப்போது, அவருக்கும், நண்பர்களுக்கும் இடையே, வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த நண்பர்கள் மூவரும், காலி பீர் பாட்டிலை உடைத்து, ராஜாவை சரமாரியாக குத்தி தப்பினர்.

ராயப்பேட்டை மருத்துவமனையில், ராஜா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிந்த அண்ணாசாலை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட, நாகராஜ், 35, அப்பு, 23, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காமராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.சென்னையில், டாஸ்மாக் கடை திறக்கப்படாத நிலையில், போதை தகராறு, அடிதடி என, குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X