வெளியே சுற்றியவர் வீட்டு தனிமை ரத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளியே சுற்றியவர் வீட்டு தனிமை ரத்து

Added : ஜூன் 17, 2020
Share

சைதாப்பேட்டை : மருத்துவர்கள் அறிவுரையை மீறி, வெளியே சுற்றிய தொற்று பாதித்தவரின் வீட்டு தனிமையை ரத்து செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, முகாம் தனிமைக்கு அனுப்பி வைத்தனர்.

சைதாப்பேட்டை, சாரதி நகரைச் சேர்ந்தவர் ராபின்சன், 25. இவருக்கு, சில நாட்களுக்கு முன், தொற்று பாதித்தது. மேல் பரிசோதனைக்கு பின், 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்; வெளியே செல்லக்கூடாது என, மருத்துவர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.ஆனால், இரு நாட்களில் வெளியே சுற்றினார். இதனால், அக்கம்பக்கத்தினர் பீதி அடைந்தனர். சுகாதார அதிகாரி புகாரில், சைதாப்பேட்டை போலீசார், ராபின்சன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.மேலும், அவரது வீட்டு தனிமையை ரத்து செய்து, குமரன் நகரில் உள்ள ஒரு தனிமை முகாமில் சேர்த்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X