சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் : மனைவி பிரிந்த ஏக்கத்தில், குடிபோதைக்கு அடிமையானவர், கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

சென்னை, திருவொற்றியூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ், 35. இவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி பிரிந்து விட்டார்.இதனால், மனமுடைந்த கணேஷ், குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். நேற்று முன்தினம் இரவு, அதீத மது போதையில் இருந்தவர், எதிர்பாராதவிதமாக, வீட்டருகே இருந்த தரை கிணறு பகுதிக்கு சென்றுள்ளார்.அப்போது, கால் இடறி கிணற்றில் விழுந்தவர், நீரில் மூழ்கி பலியானார். திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்.சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X