பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர் வனப்பகுதியில், கால்நடைகளை மேய்க்க கொண்டு செல்வோர், எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பவானிசாகர் வனப்பகுதில், போதிய மழையின்றி, வெயில் கொளுத்துவதால் மரம், செடி, கொடிகள் காய்ந்து, நீர்நிலைகள், குட்டைகள் வறண்டுள்ளன. இதனால் வனப்பகுதிகளில் வசிக்கும் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள், தண்ணீர் தேடி திரிகின்றன. இதனால் பவானிசாகர் அணையை ஒட்டிய வனப்பகுதியில், யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில், குட்டிகளுடன் பூங்காவை ஒட்டியுள்ள, கீழ்பவானி வாய்க்காலில், தண்ணீர் குடிக்க செல்கின்றன. நேற்று மதியம் மூன்று யானைகள், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் குடித்துள்ளன. அணையை ஒட்டியுள்ள காட்டில் அவை முகாமிட்டுள்ளன. பகலில் எந்நேரத்திலும், தண்ணீர் குடிக்க வர வாய்ப்புள்ளது. எனவே, வனப்பகுதியில் கால்நடை மேய்ப்போர், கவனத்துடன் இருக்க வேண்டும் என்று, பவானிசாகர் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X