பொது செய்தி

தமிழ்நாடு

100 ஆண்டுகளாக வாய்க்கால் மூலம் பயன்: அனைத்து நிலத்துக்கும் பாசன வசதி அளிக்க கோரிக்கை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

மோகனூர்: 'நூறு ஆண்டு காலம், வாய்க்கால் மூலம் பாசனம் பெற்று வரும் அனைத்து நிலங்களுக்கும், பாசன வசதி செய்து கொடுக்க வேண்டும்' என, ஒருவந்தூர் நீரேற்று பாசன கூட்டுறவு சங்க தலைவர் செல்ல ராசாமணி, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராஜ, கொமாரபாளையம், மோகனூர் வாய்க்கால் கடைமடை பகுதி ஒருவந்தூர்-வடுகப்பட்டி வரை விவசாயத்துக்கு தண்ணீர் தடையின்றி செல்வதற்கு, வாய்க்கால் சீரமைப்பு (ரீ மாடலிங்) செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு பல ஆண்டாக கோரிக்கை வைத்திருந்தோம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர், வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக, 184 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், வாய்க்காலின் இருபுற கரை வாய்க்கால் தரைமட்டத்தில் இருந்து, ஏழு முதல், ஒன்பது அடி வரை உள்ளது. தற்போது, வாய்க்காலின் இருபுறம் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர், நான்கரை அடி உயரமே உள்ளது. அதுவும், ஒன்றரை அடி, தரை மட்டத்துக்கு கீழ் சென்று விடுவதால், வாய்க்கால் மூன்று அடி உயரமே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. உயரம் குறைவாக கட்டப்படுவதால், கரை சரிந்து மண் வாய்க்காலுக்குள் விழுந்து, கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்படும். விவசாயிகளின் நலன் கருதி, தடுப்பு சுவரை, குறைந்த பட்சம், ஏழு அடி உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாய்க்கால் மூலம், 2,900 ஏக்கர் பாசனம் பெறப்படுகிறது. கரைகளின் இருபுறம் வாய்க்காலில் இருந்து நடைநீர் முறையிலும், மதகு அமைத்தும், மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, மதகுகள் அடைக்கப்பட்டு, அரை அடி குழாய் மட்டுமே தண்ணீர் செல்வதற்கு அமைக்கப்படுகிறது. அவை தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருக்கும். மேலும், ஐந்து முதல், 10 ஏக்கர் வரை பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் செல்வதற்கு, இந்த அரை அடி குழாய் போதுமானதாக இருக்காது. விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் வகையில், ஒரு அடி குழாய் வரை வைத்துக் கொடுக்க வேண்டும். நூறு ஆண்டு காலம் வாய்க்காலில் இருந்து மதகுகள் மூலம் பாசனம் பெற்று வரும் ஒரு சில நில உரிமையாளர்களின் நிலங்களுக்கு, பொதுப்பணித்துறை ஆவணங்களில் பாசனம் பெறுவதற்கான குறிப்புகள் இல்லை என்ற காரணத்தை காட்டி பாசன வசதி செய்து கொடுக்க மறுக்கின்றனர். அவற்றை தவிர்த்து, நூறு ஆண்டு காலம் வாய்க்கால் மூலம் பாசனம் பெற்று வரும் அனைத்து நிலங்களுக்கும் பாசன வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X