பொது செய்தி

இந்தியா

சண்டை வேண்டாம்: பேச்சுவார்த்தைக்கு அழைக்குது சீனா

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை எனக்கூறியுள்ள சீனா, பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவில், லடாக்கின் கல்வான் பகுதியில், ஐந்து வாரங்களாக, இந்திய - சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழியத் தாக்குதலில், நம்
India, China, FaceOff, India-China Border, Ladakh Border, Chinese, Foreign Ministry, Spokes person, இந்தியா, சீனா, எல்லை, பிரச்னை, வெளியுறவுத்துறை, செய்தித்தொடர்பாளர், சண்டை, வேண்டாம், பேச்சுவார்த்தை, அழைப்பு

புதுடில்லி: இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை எனக்கூறியுள்ள சீனா, பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில், லடாக்கின் கல்வான் பகுதியில், ஐந்து வாரங்களாக, இந்திய - சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழியத் தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற சீன ராணுவத்துக்கு, நம் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதல்களில், 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


இந்நிலையில், சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. நடந்ததில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளது. இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை. எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜா - Chennai,இந்தியா
17-ஜூன்-202020:34:09 IST Report Abuse
ராஜா சீனாவின் குரளி வித்தைகளை இதற்க்கு மேலும் இந்தியா நம்பாமல் நமது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானவற்றை அவசரகதியில் செய்ய வேண்டும். உண்மையான மக்கள் நலன் பொருளாதார ஸ்திரத்தன்மை என்பதை கோரோணா மற்றும் சீனா இப்போது நினைவுறுத்திக்கொண்டு இருக்கிறது. உடலிலும் மனத்திலும் வலு இருந்தால் போதாது, கையில் பணம் வேண்டும் அப்போது தான் பலம்.
Rate this:
Cancel
Manalan - chennai,இந்தியா
17-ஜூன்-202019:29:25 IST Report Abuse
Manalan If we reject all Chinese products including mobile apps. Chinese will surrer.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
17-ஜூன்-202018:24:44 IST Report Abuse
Gnanam இந்தியா அண்டைநாடுகளுடன் நட்பை விரும்பும் ஒரு புனித தன்மைவாய்ந்த நாடு. ஆசியா கண்டத்தின் அணைத்து நாடுகளும் நட்பு மனப்பான்மையுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம். எதற்கு வீண் எல்லை பிரச்சினைகள்? ஒரே ஆசியா கண்டத்தின் மக்கள் நாங்கள் என்று மார் தட்டுவோம். ஒன்றாக இணைவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X