பொது செய்தி

தமிழ்நாடு

மெல்ல உயர்கிறது அமராவதி அணையின் நீர்மட்டம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

கரூர்: கேரள மாநிலம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால், அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கேரள மாநிலம் மற்றும் அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த, 15 நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 1ல் அணையின் நீர்மட்டம், 25.26 அடியாக இருந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 51 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம், 26.58 அடியாக இருந்தது. கடந்த, 15 நாட்களில் அணையின் நீர்மட்டம், 1.34 அடி அதிகரித்துள்ளது. அணை மூலம், கரூர் மாவட்டத்தில், 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தாந்தோணிமலை பஞ்., யூனியன் பகுதிகளை சேர்ந்த, கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. வரும் ஜூலை மாத இறுதியில், அமராவதி அணையில் இருந்து, பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X