பொது செய்தி

இந்தியா

அத்துமீறினால் பதிலடி: சீனாவுக்கு மோடி ‛‛சுளீர்''

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (21+ 10)
Share
Advertisement
Modi, Galwan Valley, India-China face-off, PM Modi, Peace, India, Meeting, china, பிரதமர், மோடி, எல்லை பிரச்னை, பதிலடி, இந்தியா, அமைதி, ஆலோசனை, கூட்டம்

புதுடில்லி: இந்தியா, அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும், அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதன் தொடக்கத்தில் லடாக் எல்லையில் அத்துமீறிய சீன ராணுவத்தினர் உடனான தாக்குதலில் வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news


வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மோடி பேசியதாவது: எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு தான். அதேநேரத்தில் அத்துமீறினால் எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் பலம்வாய்ந்த நாடாகும்.


latest tamil news


இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.

இந்தியாவில் தற்போது 1 கோடி பிபிஇ கிட்கள் உற்பத்தி செய்கிறோம். சுமார் 900 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கையானது, தற்போது சிகிச்சையில் உள்ளோர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனாவை எதிர்த்து போராடவும், அதன் பரவலை கட்டுப்படுத்தவும் முடிந்தது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-ஜூன்-202012:46:16 IST Report Abuse
Thiagarajan Kodandaraman திரு வாஜ் பாய் பாக்கில் செய்தது போல் அதிரடி தாக்குதல் சீன நகரத்தின் மீது நடத்தி நம்முடைய கெத்தை காட்ட வேண்டிய நேரமிது ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
17-ஜூன்-202020:34:12 IST Report Abuse
sankaseshan Thanks a lot Dinamalar .
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-ஜூன்-202020:19:52 IST Report Abuse
vbs manian இனியும் இந்தியா சீனாவுடன் வர்த்தக கட்டுமான நடவடிக்கைகளை தொடர்ந்தால் நமக்கு சூடு சொரணை எதுவும் யில்லை என்று அர்த்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X