பொது செய்தி

இந்தியா

55 சீன செயலிகளுக்கு தடை: உளவு அமைப்புகள் பரிந்துரை

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Intel Agencies, mobile Apps, China Apps, Red Flag, india, china, ban, உளவு, சீனா, ஆப்கள், செயலி, மத்திய அரசு

புதுடில்லி: இந்தியாவுக்கு வெளியே தகவல்களை எடுத்து செல்வதுடன், பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தும் சீன தொடர்புடைய 55 செயலிகளை முடக்குவதோடு, பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாமென அறிவுறுத்துமாறு, மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.

பிரபல வீடியோ கான்பிரன்சிங் செயலி ஜூம், டிக்டோக், யூ.சி. பிரவுசர், எக்ஸெண்டர், ஷேர் இட் மற்றும் கிளீன் மாஸ்டர் உள்ளிட்டவை அடங்கிய சீன செயலிகளின் பட்டியலை மத்திய அரசுக்கு உளவு அமைப்புகள் அனுப்பிவைத்துள்ளன. மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் என்பதை உணர்ந்து, உளவு அமைப்புகளின் பரிந்துரைக்கு சமீபத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மொபைல் செயலியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஒவ்வொன்றாக சோதனை நடைபெற்று வருவதாகவும், பரிந்துரை தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.' இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


கடந்த ஏப்ரல் மாதம், தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் பரிந்துரையை அடுத்து வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் செயலி பயன்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தைவான், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாமென கேட்டுகொண்டன. உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக ஜூம் செயலி கூறியிருந்தது.


latest tamil news


அவ்வப்போது பாதுகாப்பை சமரசம் செய்யும் மொபைல் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வந்துள்ளது. குறிப்பாக பிரபல வீடியோ பகிரும் தளமான டிக்டோக் செயலி, சீனாவின் இணைய நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். டிக்டோக் செயலி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் பல ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள், சீன டெவலப்பர்களால் உருவாக்கப்பட்டவை அல்லது சீன இணைப்புகளைக் கொண்ட நிறுவனங்களால் தொடங்கப்பட்டவை. அதில் உளவு பார்ப்பதற்கான ஸ்பைவேர் அல்லது பிற தீங்கிழைக்கும் பொருட்கள் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news


இது தகவல்கள் பாதுகாப்பில் தீங்கு ஏற்படுத்தக்கூடுமென்பதால் தான், பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்த வேண்டாமென ராணுவம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. சீனா தொடர்புடைய வன்பொருள் அல்லது மென்பொருட்களில் பாதுகாப்பு குறைபாடு கவலைகள் இருப்பதை மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. ஒரு வாதத்திற்கு, ஏதேனும் மோதல் ஏற்பட்டால், தகவல் தொடர்பு சேவையை சீர்குலைக்க சீனா இதனை பயன்படுத்த கூடுமென கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
18-ஜூன்-202000:56:31 IST Report Abuse
unmaitamil சும்மா சீனா அப்ப்ளிகேஷன்களை, பொருள்களை ஒழிக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டால் மட்டும் போதாது. அதை ஒழிப்பதற்கு முன் அதேபோன்ற வேறொரு அப்ப்ளிகேஷனை, பொருள்களை உண்டாக்க வேண்டும். அப்படி ஒன்றை உண்டாக்கினால் மட்டுமே சீன அப்ப்ளிகேஷனையோ, பொருள்களையே ஒழிப்பது சாத்தியம்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
17-ஜூன்-202023:03:02 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு திங்கள் கிழமையில் இருந்துதான் ஆய்வை ஸ்டார்ட் பண்ணியிருக்காங்களாக்கும் ?
Rate this:
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
18-ஜூன்-202002:02:35 IST Report Abuse
Natarajan Ramasamyyes. monday - which year these software were released. TRAI REGULATES nothing. How many advertisements go along with these chinese programs. How much TRAI has collected from these software companies/ mobile phone companies for advertisements released through them?...
Rate this:
Cancel
praveen - madurai,இந்தியா
17-ஜூன்-202022:04:16 IST Report Abuse
praveen சீனாகாரன் பொருளை வித்து லாபம் பாக்குறான், அதுல சாப்ட்வார எழுதி வச்சு, அதுலயும் விளம்பரத்தை ஓட வச்சு லாபம் பாக்குறான். பதினஞ்சு வருஷம் நல்லா கத்துக்கிட்டு வளந்துட்டான். அந்த அளவுக்கு நாம வளந்தா மட்டுமே அவனோட போட்டி போட முடியும். நாமளா போட்ட appப தடை பண்ணிரலாம், ஆனா போன்ல நிரந்தர ஆப் இருக்கே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X