சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்

கண்ணீர் காரணம்


சமையலுக்கு வெங்காயம் அடிப்படை தேவை. வெங்காயத்தை நறுக்கும் போது மட்டும் கண்களில் கண்ணீர் வருகிறது. காரணம் வெங்காயத்தை நறுக்கும் போது ஆலினேஸ் என்ற நொதி, அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு திரவம் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இது எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து கண்களுக்கு எரிச்சலுாட்டி கண்ணீர் சுரப்பிகளை துாண்டுகின்றன. இதனால் கண்ணீர் வருகிறது. கண்களுக்கு எரிச்சலுாட்டும் வாயுக்களை சரிசெய்து கண்களை பாதுகாக்கவே கண்ணீர் வருகிறது.

தகவல் சுரங்கம்

பணவீக்கம்


பொருளாதாரத்தில் 'பணவீக்கம்' முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறிப்பிட்ட இடைவெளியில் பொருட்கள் மற்றும் சேவையில் ஏற்படும் விலையேற்ற விகிதத்தை குறிப்பிடுகிறது. உதாரணமாக 2010ல் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 20. 2020ல் விலை ரூ. 60 ஆகிறது எனில், பத்து ஆண்டுகளில் அரிசியின் விலை 'மூன்று மடங்கு' அதிகரித்துள்ளது. இவ்வாறு ஒரு பொருளின் விலை குறிப்பிட்ட ஆண்டுகளில் அதிகரிப்பது பணவீக்கம் எனப்படுகிறது. பணவீக்கம் அதிகரிப்பது மக்களின் வாங்கும் சக்தியை குறைக்கிறது. பணவீக்கத்தில் சில வகைகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X