பொது செய்தி

இந்தியா

சீன தூதரகம் முன் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி: இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டத்தை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் சீன தூதரகம் முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: லடாக் பகுதியில் இந்திய சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் தலைநகர் புதுடில்லியில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு ஒன்று கூடி சீனாவின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர் என போலீசார் கூறினா்.


latest tamil news



மேலும் சுதேசி ஜாகரன் மன்ச்-சை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சீனாவின் நடவடிக்கையை கண்டித்து தீன் மூர்த்தி பவன் அருகில் ஒன்று கூடினர் எனவும் அவர்கள் அப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
18-ஜூன்-202011:06:38 IST Report Abuse
Anand கொரோன தொற்றை தமிழ்நாட்டில் பரப்பி விட்டவர்களுக்கு முட்டுக்கொடுக்க ஒரு கூட்டத்தை கூட்டி தலா ஒரு கோடி சன்மானம் வழங்க வேண்டும் என தீர்மானம் போட்ட கூட்டம் கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. அவர்கள் இப்படியே நிரந்தரமாக காணாமல் போக வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
17-ஜூன்-202021:00:55 IST Report Abuse
K.GOPINATHRAJA நாளுக்கொரு ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழக அரசியல்வாதிகளுக்கு சவால். சீனாவுக்கும் சீனப்பொருட்களுக்கும் எதிராக,பாகிஸ்தான் நேபால் ஆகியநாட்டிற்கு எதிராக குரல்மூலமோ வொன்றினைவோம் மூலமோ ஆர்ப்பாட்டம் மூலமோ குரல்கொடுங்கள் பார்ப்போம். கண்டிப்பாக செய்ய மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் அரசியல் செய்வது நாட்டுநலனுக்காக அல்ல.வேறொரு நலனுக்காக.
Rate this:
Cancel
kumarkv - chennai,இந்தியா
17-ஜூன்-202020:43:24 IST Report Abuse
kumarkv சீன பொருள் அனைத்தும் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X