சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பாவம்; பரிதாபம்!

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement
 பாவம்; பரிதாபம்!

பாவம்; பரிதாபம்!

'பதவியை தக்க வைப்பதற்காக, இவர் படும் அவஸ்தையை பார்த்தால், நமக்கே பரிதாபமாக இருக்கிறது' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ்சிங் சவுகானை பற்றி கூறுகின்றனர், அந்த மாநில காங்கிரஸ் கட்சியினர். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, ஒரு வழியாக முதல்வர் பதவியில் அமர்ந்தாலும், சிவ்ராஜ்சிங் சவுகானால், அந்த நாற்காலியில் நிம்மதியாக அமர முடியவில்லை. மத்திய பிரதேசத்தில், விரைவில், 24 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, சவுகான் ஆட்சியில் தொடர முடியும்.
இதனால், அவரது முகத்தில் தேர்தல் பீதி உறைந்துள்ளது. தினமும் கனவில், ஆட்சி கவிழ்வது போன்ற கனவு வந்து, அவரை மேலும் வெறுப்பேற்றுவதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தன் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக உள்ள நரோத்தம் மிஷ்ராவுக்கும், சவுகானுக்கும் எப்போதுமே ஆகாது. 'முதல்வர் பதவி எனக்கு கிடைக்க வேண்டியது. அவர் அனுபவிக்கிறார்' என, வெறுப்புடன் புலம்பி வருகிறார் மிஷ்ரா. நடக்கவுள்ள இடைத்தேர்தலில், இவர் உள்ளடி வேலை பார்த்தால், கதை கந்தலாகி விடும் என்பதால், கவுரவத்தை விட்டு, நேரடியாக அவரது வீட்டுக்கே சென்று, சமாதானப்படுத்தியுள்ளார் சவுகான். எதிர்க்கட்சியினரான காங்கிரசாரோ, 'பதவியில் நீடிப்பதற்காக இவ்வளவு இறங்கி வர வேண்டுமா இவர்; பாவம், பரிதாபம்' என, சவுகானை கிண்டலடிக்கின்றனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X