சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'கொரோனாவுக்கு பிறகு, உண்மையிலேயே நிறைய மாற்றங்கள் ஏற்படத் தான் போகிறது; அதற்கு தயாராவோம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் விவேக் அறிக்கை: கொரோனா முடிந்ததும், எவ்வித பாகுபாடும் இன்றி, அனைவரும் ஒன்றிணைந்து நம் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்; இயற்கையை போற்ற வேண்டும்; சித்த மருத்துவத்தை வளர்க்க வேண்டும்; நீர் மேலாண்மையை சிறப்பாக்க வேண்டும்.


'ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த ஆர்வமாக இருப்பது போல, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியிலும் செலவிட்டால் தேவலை...' என, கூறத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன் பேட்டி:
'முழு ஊரடங்கு, வதந்தி' என, சில நாட்களுக்கு முன் கூறிய முதல்வர், தற்போது, 12 நாட்களுக்கு ஊரடங்கு அறிவித்துள்ளார். இதனால், கடன் வாங்கி, தொழில் துவங்கிய, சிறு குறு வியாபாரிகள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பொது முடக்கத்தை, ஜூன், 30க்கு பின், நிரந்தரமாக தளர்த்தப்பட்டால் தான், பலரின் வாழ்வாதாரம் மீண்டெழும்.



'நல்லா தானே போயிட்டிருந்தது; கொரோனா கெடுத்து விட்டதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில செயலர் ஸ்ரீநிவாசன் பேட்டி:
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, ஆறு ஆண்டுகளில், காங்., செய்த வரலாற்று பிழைகளை சரி செய்து சாதித்திருக்கிறது. கொரோனா நிவாரணமாக, சிறு, குறு தொழில்களுக்கு தமிழகத்தில் மட்டும், இதுவரை, 7,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகள் வாரியாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது.



'நல்ல கோரிக்கை தான்; தமிழக அரசு ஏற்க வேண்டும்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை:
அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் எத்தகைய அணுகுமுறை இருக்கிறதோ, அதே அணுகுமுறை, அரசுப் பணியில் ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இருக்கவேண்டும். எனவே, கொரோனா சிகிச்சையை, ஓய்வூதியத்தினரின் காப்பீடு திட்டத்தில் சேர்க்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



'நல்ல காலத்திலேயே, அபாய சங்கு ஊதுவீர்கள்; இப்போது கேட்கவா வேண்டும்...' என, எதிர்கேள்வி கேட்கத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை:
ஏற்கனவே ஏராளமானோர் வேலை இழந்துள்ள நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும், 15 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். மக்களில் பெரும்பாலானோர், வாழ்வதற்கான அனைத்து வழிகளையும் இழந்துள்ளனர். ஆனால், மோடி அரசு அது பற்றி கவலைப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X