சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்காது!

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்காது!


டீ கடை பெஞ்ச்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்காது!

''கொரோனா நிவாரண நிதி தர்றாங்கன்னு தகவல் பரவி, விண்ணப்பங்கள் குவிஞ்சிட்டுல்லா...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எங்க ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்துல சுத்திட்டு இருக்கிற சில புரோக்கர்கள், அரசு, கொரோனா நிதியுதவி வழங்குறதா, வதந்தியை பரப்பிட்டாவ... நிதியுதவி கேட்டு, 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள்
குவிஞ்சிட்டு வே...
''அதிர்ச்சியான அதிகாரிகள், கிராமங்களுக்கு போய், 'யாரும் மனு குடுக்க வேண்டாம்... அரசு நிதியுதவி அறிவிச்சா, நாங்களே முகாம் நடத்தி, மனுக்களை வாங்குதோம்'னு தண்டோரா போட்டு அறிவிச்சிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஓராண்டுக்கு நீட்டிக்கணும்னு கேட்கிறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.''என்னத்தங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பொதுப்பணித் துறையின் கட்டடங்கள் பிரிவு மூலமா, அரசின் பல்வேறு துறைகளுக்கும் கட்டடங்கள் கட்டுறாங்க... பொதுப்பணித் துறையில பதிவு பெற்ற, 15 ஆயிரம் கான்ட்ராக்டர்கள் இருக்காங்க பா...
''இவங்க, வருஷத்துக்கு ஒரு முறை, தங்களது பதிவை புதுப்பிக்கணும்... இப்ப, கொரோனா ஊரடங்கால, மத்திய பொதுப்பணித் துறை கான்ட்ராக்டர்களின் பதிவை, ஒரு வருஷத்துக்கு, மத்திய அரசு நீட்டிச்சிருக்குது...
''இதே மாதிரி, தமிழக பொதுப்பணித்
துறை கான்ட்ராக்டர்களின் பதிவையும் ஓராண்டுக்கு நீட்டிக்கணும்னு, முதல்வருக்கு கோரிக்கை வச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அமைச்சரவையில மாற்றம் வரும்னு தோணுச்சு... ஆனா, இப்போதைக்கு இல்லையாம்...'' என, கடைசி தகவலுக்கு வந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கொரோனா பத்தி, சட்டசபையில, மார்ச் மாதம் எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை செய்தப்ப, 'தமிழகத்துல ஒரு உயிர் கூட பலியாக விட மாட்டோம்'னு முதல்வர் சபதமே
போட்டாருங்க...
''அதே மாதிரி, ஆரம்பத்துல தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை, பலரும் பாராட்டுனாங்க... ஆனா, வெளிநாடுகள்ல இருந்து வந்தவங்களை, முறையா சோதனை பண்ணாதது, டில்லி மாநாட்டுக்கு போயிட்டு வந்தவங்களை, கோட்டை விட்டது, கோயம்பேடு மார்க்கெட்டை மூடாம இருந்ததுன்னு, பல விஷயங்கள்ல, அரசாங்கம் சொதப்பி,
கொரோனாவை பரவ விட்டுடுச்சுங்க....''இதுக்கு, சுகாதாரத் துறையின் செயல்பாடு சரியில்லாததும் காரணம்னு புகார்கள் வந்தது... இதனால, துறையின் செயலர், அமைச்சரை மாற்ற, முதல்வர் முடிவு
எடுத்திருக்காருங்க...''செயலரை மாத்தியாச்சு... மத்தபடி வேற எந்த மாற்றமும் இருக்காதுன்னு தலைமைச் செயலக வட்டாரம் சொல்லுதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-ஜூன்-202006:14:10 IST Report Abuse
D.Ambujavalli செயலர் மாறியதும் தொற்று எண்ணிக்கை அப்படியே குறைந்துவிட்டது கண்ணாடியைத் திரும்பியதும், பார்த்தீர்களா, ஆட்டோ எப்படி ஓடுது என்று?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X