தமிழ்நாடு

சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி இறந்தது

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement
 சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி இறந்தது


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, சுருக்குக் கம்பியில் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்ப்டட சிறுத்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

.கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகம், ஓடந்துறை காப்புக்காடு அருகே, அறிவொளி நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில், காட்டுப் பன்றிகளுக்கு வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில், சிறுத்தை சிக்கி இருந்தது தெரிந்தது. வனத்துறையினர் வந்து, புதரில் இருந்த சிறுத்தையை பார்த்தபோது, உடலில் பலத்த காயம் இருந்தது தெரிந்தது. கால்நடை டாக்டர்கள் இருவர், சிறுத்தை அருகே சென்று, மயக்க ஊசி போட்டனர்.பின், சிறுத்தையை பிடித்து, பாதுகாப்புடன் எடுத்து வந் மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு உட்பட்ட மர டிப்போவில், சிறுத்தைக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X