'எல்லையை சீனா ஆக்கிரமித்ததை மக்களுக்கு பிரதமர் சொல்ல வேண்டும்'

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
'எல்லை,சீனா ஆக்கிரமித்தது,மக்களுக்கு பிரதமர் சொல்ல வேண்டும்'

புதுடில்லி,: ''இந்திய எல்லைப் பகுதியை, சீனா எப்படி ஆக்கிரமித்தது என்பது பற்றி, மக்களிடம் பிரதமர் சொல்ல வேண்டும்,'' என, காங்கிரஸ் தலைவர், சோனியா கோரிக்கை விடுத்து
உள்ளார்.

இந்தியா - சீனா இடையே, எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. எல்லையில் இரு படைகளுக்கு இடையே நடந்த மோதலில், நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, காங்கிரஸ் தலைவர், சோனியா வெளியிட்டுள்ள, 'வீடியோ' பதிவில் கூறியிருந்தாவது:
சீன ராணுவம், கடந்த, இரண்டு மாதமாகவே, லடாக் எல்லையில் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சீன ராணுவம் நடத்திய அத்துமீறலால், மக்களிடம் பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது.இந்திய ராணுவத்தினர், 20 பேர் செய்து உள்ள உயிர் தியாகம், 130 கோடிக்கும் அதிகமான மக்களிடம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு. என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.சீனா, இந்த அத்துமீறலில் எப்படி ஈடுபட்டது என்பதை, மக்களிடம் சொல்ல வேண்டிய பொறுப்பு, பிரதமர் மோடிக்கு உள்ளது. சீன தாக்குதலில், எத்தனை வீரர்கள் இறந்தனர்; எத்தனை பேர் காயம் அடைந்தனர்; எத்தனை வீரர்களை காணவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும், இந்திய பகுதியில், சீன எவ்வளவு துாரம் ஆக்கிரமித்துள்ளது; எப்படி ஆக்கிரமித்தது என்பதையும், பிரதமர் தெரிவிக்க வேண்டும்.இந்நிலைமையை எதிர்கொள்ள, அரசிடம் உள்ள திட்டம் பற்றியும் தெரிவிக்க வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில், இந்திய ராணுவம், வீரர்கள், அவர்களது குடும்பத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் எப்போதும் இருக்கும்.இந்த சவாலான நேரத்தில், எதிரியை எதிர்கொள்ள, ஒட்டு மொத்த நாடும், ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு, சோனியா கூறியுள்ளார்.


'உங்கள் பின்னே நாடே உள்ளது'



காங்கிரஸ் எம்.பி., ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:எல்லையில் இரு படைகளுக்கு இடையே நடந்த மோதல் குறித்து, பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்; என்ன நடக்கிறது என்பதை, இந்த நாடு அறிய வேண்டும். நீங்கள் ஏன் மறைக்கிறீர்கள். தைரியமாக முன்வந்து, உண்மையை தெரிவியுங்கள். உங்களுக்கு பின்னால் இந்த நாடே இருக்கிறது. பயப்படத் தேவையில்லை.நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேரின் உயிரை, அவர்களுடைய குடும்பத்தாரிடம் இருந்து சீனா பறித்துள்ளது; நம் நாட்டின் பகுதியையும் பறிக்க முயற்சிக்கிறது. எவ்வளவு தைரியம் இருந்தால், சீனா நம் வீரர்களை கொல்லும்; நம்முடைய எல்லையை எடுத்துக் கொள்ள முயற்சிக்கும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார். காங்., பொதுச் செயலர், பிரியங்கா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:நம் நிலம், இறையாண்மைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நம் வீரர்கள் கொல்லப்பட்டுஉள்ளனர். இனியும் நாம் அமைதியுடன் இருக்க வேண்டுமா; உண்மையை நாடு அறிந்து கொள்ள வேண்டும்.நம் நிலம் பறிபோவதைத் தடுக்கக் கூடிய தலைமை நாட்டுக்குத் தேவை. சீனாவுக்கு எதிராக, பிரதமர் மோடி தைரியமாக நிற்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
18-ஜூன்-202023:55:20 IST Report Abuse
Balaji சொல்லிட்டா போச்சி ஜாமி... 1962 - அக்ஷய் சீன 38000 சதுர கிலோமீட்டர் 2008 - 250 சதுர கிலோமீட்டர் 2012 - 640 சதுர கிலோமீட்டர் இதெல்லாம் தா நாம அவுங்களுக்கு விட்டுகுடுத்த விபரம் ஜாமி. கொஞ்சம் செரியான்னு பாத்து சொல்லுங்க ஜி...
Rate this:
Cancel
rcsn - Chennai,இந்தியா
18-ஜூன்-202022:18:20 IST Report Abuse
rcsn நீங்கள் எப்படி இந்தியாவிற்குள் நுழைந்தீர்கள் என்ன காரணத்திற்காக நுழைந்தீர்கள் என்ற விபரம் முதலில் சொல்லுங்கள். மத்தியில் தலைமையில் இருப்பவர் ஒரு இந்தியர். நீங்கள்?
Rate this:
Cancel
Hari Krishnan - Coimbatore,இந்தியா
18-ஜூன்-202020:02:56 IST Report Abuse
Hari Krishnan "'இந்நிலைமையை எதிர்கொள்ள, அரசிடம் உள்ள திட்டம் பற்றி தெரிவித்தால் மணி சங்கர் அய்யர் மற்றும் கம்யூனிஸ்டு கைக்கூலிகள் போன்ற பச்சோந்திகளை நிறையவே ஸ்டாக் வைத்துள்ளோம். உடனடியாக அந்த திட்டத்தை சீனாவுடன் பகிர்ந்து அடுத்த தாக்குதலுக்கு சீனாவை ஆயத்தமாக்குவோம், " சோனியா போன்றோருக்கு நம் நாட்டின் இழப்புகள் ஒவ்வொன்றும் மோடி மீது கல்லெறிய கிடைக்கும் வாய்ப்புகள் மட்டுமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X