அரசியல் செய்தி

தமிழ்நாடு

வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை: நிழல் நிஜமாகாது என்கிறார் ஸ்டாலின்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (98)
Share
Advertisement
வகுப்பறை கல்வி, மாற்று இல்லை, நிழல் நிஜமாகாது

சென்னை: 'இணையவழி கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை; நிழல் நிஜமாகி விடாது என்பதை அ.தி.மு.க., அரசு உணர வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
தமிழகத்தில் உள்ள, 1.31 லட்சம் மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராம பகுதிகளில் உள்ளனர்.
இணைய வழி கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட்போன் போன்றவை, கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. இணையதள வசதிகளும் அனைத்து பகுதிகளிலும் இல்லை.கல்வி என்பது கற்றறிய வேண்டியது.

அது, ஏதோ பங்குச் சந்தை வியாபாரம் போன்றது அல்ல; டெண்டர் பேரமும் அல்ல என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.ஆசிரியர்,- மாணவர் கலந்துரையாடல் வாயிலாக உருவாக்கப்படும் கல்விதான், நாட்டின் மிக முக்கியமான சொத்து. இணைய வழிக்கல்வி, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும், பாகுபாடுகளையும் உருவாக்கி விடும்.

மாணவர் சமுதாயத்திடையே, பள்ளிகளில் நிலவிவரும் சமநிலையை சரித்துச் சாய்க்கும். இந்த இணையவழி கல்வி, வேற்றுமை மனப்பான்மையை, பிஞ்சு உள்ளங்களிலேயே நஞ்சாகப் புகுத்திவிடும்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். ஆகவே, இணையவழி உட்கட்டமைப்பு முழுமையாக இல்லாத தமிழகத்தில், நேரடியாகக் கற்றல், கற்பித்தல் என்ற வகுப்பறை சூழல் மட்டுமே, கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.இணையவழி கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை; நிழல் நிஜமாகிவிடாது என்பதை, அ.தி.மு.க., அரசு உணர வேண்டும். அப்படியொரு வகுப்புகள் நடத்த அனுமதியளிக்க கூடாது.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


அரசு ஊழியரை இழக்கும் நிலை இனியும் கூடாதுசென்னை : 'அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் யாரையும் இழக்கும் நிலை இனியும் கூடாது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன், கொரோனாவால் மறைந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தலைமை செயலகம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

'சென்னையில், திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவதை புரிந்துகொள்ள முடியவில்லை' என, தொற்று நோய் ஆராய்ச்சி மைய மருத்துவர், பிரப்தீப் கவுர் கூறியிருப்பது, மிகவும் உன்னிப்புடன் கவனிக்கத்தக்கது.

இதற்கு உரிய விளக்கத்தை அளிப்பதோடு, கொரோனா நோய் தொற்று நடவடிக்கையில், அரசு மிகுந்த வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுய பாதுகாப்பிற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும். இனி எந்த ஒரு முன்கள பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை இனியும் ஏற்படக்கூடாது.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
19-ஜூன்-202009:58:37 IST Report Abuse
sankar எல்லாம் கிஷோர் ஆரியன் செயல் - விவரம் தெரியாமல் எழுதிக்கொடுத்ததை உளறிவைத்து - என்னமோ நடக்குது
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-202022:18:08 IST Report Abuse
babu அதெல்லாம் ஆகும். அந்த துண்டு சீட்ட பிடுங்கிட்டா நிஜமாகும்.
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
18-ஜூன்-202021:57:17 IST Report Abuse
Pats தமிழகத்தில் மொத்தமாக 1.31 லட்சம் பள்ளி மாணவர்கள்தான் இருக்கின்றனரா? ரொம்ப டவுட்டா இருக்கே? அதுவும் 60% கிராமத்தில் இருக்கிறார்களாம் - அதாவது 78,600 பேர். இது ரொம்ப அநியாயத்துக்கு பொய்யா இருக்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X