பொது செய்தி

தமிழ்நாடு

தனிமை பகுதியில் கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.

திருக்கோவிலுார் பேரூராட்சிக்குட்பட்ட 6வது வார்டு, அஷ்டலட்சுமி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டில் வேலை செய்த பணிப் பெண்ணிற்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.இப்பகுதிகளை நேற்று கலெக்டர் கிரண் குராலா நேரில் ஆய்வு செய்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று ஏற்பட்டது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட வீட்டில் மட்டுமே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததைத் பார்த்து, இப்பகுதி முழுவதும் வெளி நபர்கள் வராதபடி தடுப்புகளை மாற்றி அமைத்து, கிருமி நாசினி இரு வேளையும் தெளித்து சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.மேலும், சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால், அங்கிருந்து சொந்த ஊருக்கு பலரும் திரும்பக் கூடும் என்பதால், கிராமத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும், பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாதார மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் விழிப்புடன் இருந்து அவர்களை கண்டுபிடித்து சிறப்பு தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.ஆய்வின்போது ஆர்.டி.ஓ., சாய்வர்தினி, தாசில்தார் சிவசங்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை, வட்டார மருத்துவ அதிகாரி சுரேஷ் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X