பொது செய்தி

தமிழ்நாடு

அரசு இடம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் மனு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

விழுப்புரம் : அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீட்டுமனை விற்பனை செய்வதை தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

விழுப்புரம் அடுத்த வைலாமூரைச் சேர்ந்த சுகுமார் கொடுத்துள்ள மனு:எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி குடிநீர் கிணற்றுக்கு அருகில், நத்தம் புறம்போக்கில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் இடம் உள்ளது. இந்த இடத்தை தற்போது சிலர் ஆக்கிரமித்து, வீட்டு மனையாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், எங்கள் பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை பதப்படுத்த சிமென்ட் களம் அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X