சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ரூ.15 லட்சம் நிதி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார் : விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு, சக காவலர்கள் சார்பில், 15 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

2009ம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் காவலர் தேர்வில், விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 36; தேர்வானார். பின்னர், காவலர் பயிற்சி பெற்று, டில்லி சிறப்பு காவல் படையில் பணி புரிந்தார்.இதையடுத்து, சென்னை, கானத்துார் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது, மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 28ம் தேதி இறந்தார்.

இவரது மனைவி சுகந்தி, 33; மகன் விக்னேஷ்குமார், 6; ஆகியோருக்கு, செந்தில்குமாருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் சேர்ந்து, நிதியுதவி அளித்துள்ளனர்.அதன்படி, தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் பங்களிப்பாக, 15 லட்சத்து 45 ஆயிரத்து 900 ரூபாய்க்கான காசோலையை, செந்தில்குமாரின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X