சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவக் கல்லுாரி மாணவர் உட்பட 2 பேருக்கு தொற்று

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மருத்துவக்கல்லுாரி மாணவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனம், ஸ்கடர் நகரில் வசிக்கும் நகைக்கடை அதிபர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர். மற்றும் நகைக் கடை அதிபரின் கார் டிரைவர், மல்லியபத்தர் தெருவைச் சேர்ந்த ஒருவர். காவேரிப்பாக்கம் மொட்டையர் தெருவைச் சேர்ந்த ஒருவர் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.இந்நிலையில், செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வந்த 5 வது வார்டு முருங்கப்பாக்கம் அய்யிலு தெருவைச் சேர்ந்த 20 வயது பெண். மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் பயிலும் 19 வயது மாணவருக்கு நேற்று முன்தினம் இரவு தொற்று உறுதியானது.

அதனைத் தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.திண்டிவனம் நகராட்சியில் கொரோன தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X