கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனைக்கு முக்கியத்துவம்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கொரோனா வைரஸ், கண்டறியும் பரிசோதனை , முக்கியத்துவம்

புதுடில்லி : நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக நேற்று, 14 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ''கொரோனா நோயாளிகள் அனைவருக்கும், சரியான சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இதற்காக, வைரஸ் பரிசோதனைக்கு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பரிசோதனை மூலம், தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும். அப்போது தான், கொரோனா பரவலுக்கு நம்மால் முற்றுப்புள்ளி வைக்க முடியும்,'' என, பிரதமர், மோடி தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, சுகாதார கட்டமைப்பு வசதி, சிகிச்சை நடைமுறை, பொருளாதார பாதிப்பு ஆகியவை குறித்து, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன், பிரதமர், மோடி, அவ்வப்போது ஆலோசித்து வருகிறார்.நேற்று முன்தினம், ஆறாவது முறையாக, 21 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் மோடி, ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்று, பாதிப்பு அதிகமுள்ள, மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி உட்பட, 14 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
தீவிர சிகிச்சை பிரிவுஅப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விட, குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது, குறைந்த நோயாளிகளுக்கு மட்டுமே, செயற்கை சுவாசம், தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் தேவைப்படுகின்றன.சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், கொரோனாவை எதிர்த்து போராடவும், அதன் பரவலை கட்டுப்படுத்தவும் முடிந்தது.மூன்று மாதங்களுக்கு முன், இந்தியாவில், பி.பி.இ., எனப்படும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள், வைரஸ் பரிசோதனை கருவிகளுக்கு பற்றாக்குறை இருந்தது. இவற்றை நாம் இறக்குமதி செய்து வந்தோம்.
அதனால், அவற்றை நாமே தயாரிக்க ஆரம்பித்தோம். இப்போது, நம்மிடம், ஒரு கோடிக்கும் அதிகமான, பி.பி.இ., சாதனங்கள் மற்றும் என் 95 முக கவசங்கள் உள்ளன.கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளும், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.


நம்மால் முடியும்மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது, வெளியில் மக்கள் அதிகளவில் நடமாடுவது, நகரங்களில் சிறிய வீடுகள் ஆகியவை, கொரோனா பரவலை தடுப்பதில் பெரும் சவால்களாக உள்ளன.கொரோனா நோயாளிகள் அனைவருக்கும், சரியான, சிறப்பான சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இதற்காக, பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பரிசோதனை மூலம், தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்த முடியும்; அப்போது தான், கொரோனா பரவலுக்கு, நம்மால் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.அதேநேரத்தில், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டும்; அப்போது தான், மக்களின் உடல் நலமும், வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.


மம்தா புறக்கணிப்புகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, வீடியோ கான்பரன்ஸ் வழியாக, பிரதமர்,மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.அவருக்குப் பதில், மாநில அரசின் உயர் அதிகாரி பங்கேற்றார். பிரதமர் ஆலோசனை நடத்திய அதே நேரத்தில், கோல்கட்டா தலைமை செயலகத்தில், உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஒன்றில், மம்தா பங்கேற்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
18-ஜூன்-202019:07:21 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு உண்மையில் மோடி அவர்கள் ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது அதை போல KORAANA பாதிப்பும் உயர்ந்து கொண்டே உள்ளது இது தான் இவரின் சாதனை இது நமக்கு சோதனை
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
18-ஜூன்-202018:57:33 IST Report Abuse
Nallavan Nallavan REALY MODI IS GOOD FOR NOTHING
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
18-ஜூன்-202018:53:51 IST Report Abuse
Nallavan Nallavan ஒவ்வொரு முறையும் நாம் பிரதமர் என்ன பேசவேண்டும் என்று விவாதிப்பதும், பின்னர் அவர் வந்து எதையாவது பேசிச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இது ஒரு சம்பிரதாய வழக்கமாகிக்கொண்டு வருகிறது. அதை விடுத்து பிரதமர் என்ன செய்யவேண்டும் என்று பேசுவோம்.
Rate this:
18-ஜூன்-202018:59:02 IST Report Abuse
தமிழ் அவருக்கு தெரிஞ்சா பேசமாட்டாரா. பேசாம இருந்தா கெட்டபேர் வந்துடுமேன்னு சம்பந்தமே இல்லைனாகூட எதையாவது பேசிவிடுகிறார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X