ஊரடங்கை மீறிய 18,831 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 18,831 பேர் கைது

Added : ஜூன் 17, 2020
Share

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 18 ஆயிரத்து 831 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி, நேற்று முன்தினம் 16ம் தேதி சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகள் மீது 545 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.தடை உத்தரவை மீறியதாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கடந்த 16ம் தேதி வரை 18 ஆயிரத்து 409 வழக்குகள் பதிவு செய்து, 18 ஆயிரத்து 831 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 313 இருசக்கர வாகனங்கள், 276 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 328 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X