மாமல்லையில் மக்கள் எதிர்ப்பை மீறி வசிப்பிடத்தில் டாஸ்மாக் கடை திறப்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, வசிப்பிடத்தில், டாஸ்மாக் கடை திறந்தது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

மாமல்லபுரம், பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில், பல ஆண்டுகளாக, டாஸ்மாக் கடை இயங்கியது. கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் சாலைகள் சந்திப்பு, வசிப்பிட பகுதியில், கடை இயங்கி, இப்பகுதியினர் அவதிப்பட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால், கடையை அகற்ற, பொதுமக்கள் வலியுறுத்தி, இரு ஆண்டுகளுக்கு முன், கடை மூடப்பட்டது. கடந்த செப்டம்பரில், மீண்டும் திறக்க முயன்றபோது, பொதுமக்கள், மதுபானம் கொண்டுவந்த வாகனத்தை திருப்பி அனுப்பி போராடி, கடை திறக்கப்படவில்லை.

இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம், இதே வசிப்பிட பகுதியில், நேற்று முன்தினம், கடை திறந்ததால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதை மூடுமாறு, காவல், வருவாய் உள்ளிட்ட அதிகாரிகளிடம், இப்பகுதியினர் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X