ரூ.9,000 கோடி தேவை : மோடியிடம் முதல்வர் இ.பி.எஸ்., கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.9,000 கோடி தேவை : மோடியிடம் முதல்வர் இ.பி.எஸ்., கோரிக்கை

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (10)
Share
 ரூ.9,000 கோடி ,மோடி முதல்வர் இ.பி.எஸ்., கோரிக்கை

சென்னை : ''கொரோனா பரவலை எதிர்கொள்ள, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய, சிறப்பு நிதியாக, 9,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்தார்.பி

ரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மாநில முதல்வர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:
கொரோனா தொற்றை தடுக்க, தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள், தமிழகத்தில் தான் உள்ளன. இதுவரை, 7.48 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்ததில், 48 ஆயிரத்து, 19 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில், 26 ஆயிரத்து, 782 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால், நோய் பரவலை தடுப்பது, பெரும் சவாலாக உள்ளது.

சென்னையில், நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க, ஆறு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே நான் கோரியபடி, தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க, 3,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும். மாநில சுகாதார இயக்கத்திற்கு, இரண்டாவது தவணைத் தொகையை விடுவிக்க வேண்டும்.அடுத்து, தமிழகத்தில், கொரோனாவை எதிர்கொள்ளவும், கொேரானாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநில பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், 9,000 கோடி ரூபாய், நிதியுதவி வழங்க வேண்டும்.

மார்ச் மாதத்திற்கான, ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகையை விடுவிக்க வேண்டும். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்கு, 15வது நிதிக்குழு ஒதுக்கிய நிதியில், 50 சதவீதத்தை விடுவிக்க வேண்டும். நோய் தொற்றை தடுக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, உடனடியாக, 1,000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும்.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், உணவு தானியம் மற்றும் பருப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்க வேண்டும்.
நெல் கொள்முதலுக்கு வழங்க வேண்டிய, மானிய நிலுவைத் தொகை, 1,321 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X