பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு ஊராட்சிகளில் தீவிரம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகள் உள்ளன. இதில், அனைத்து ஊராட்சிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை, சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் தீவிரமாக நடந்து வருகிறது.

சுகாதாரத் துறையினர், ஊராட்சி பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.இதேபோல், ஊராட்சி நிர்வாகத்தினர், கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் துாவும் பணி போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும், முக கசவம் அணிந்து வர வேண்டும், இரண்டு மீட்டர் துாரம் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும்.முக கவசம் மற்றும் கையுறை அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என, விழிப்புணர்வு வாசகம் அடங்கிய விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X