சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

நகரி: திருப்பத்துார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, பல்லாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 33. இவர், காளஹஸ்தி பகுதியில், கள் இறக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், மேடாம் காலனியில், கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியபோது, மரத்தின் அருகே சென்ற மின்ஒயர் மீது, அவரது கைபட்டதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மூதாட்டி பலி

நகரி: சித்துார் மாவட்டம், சத்தியவேடு அடுத்த, கண்ணாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணியம்மாள், 80. இவர், நேற்று முன்தினம் தனது கிராமம் அருகே செல்லும் தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, கால் தவறி கால்வாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். சத்தியவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்

நகரி: சித்துார் மாவட்டம், ஜோடிசிந்தல பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், சிறப்பு படை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சித்துார் - குடியாத்தம் சாலையில் வேகமாக சென்ற காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.காரில், 35 செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். காரில் இருந்த குடியாத்தம் பெருமாள், 40, என்பவரை கைது செய்தனர்.

முதியவர் தற்கொலை

நகரி: சித்துார் மாவட்டம், புங்கனுார் டவுன் பகுதியில், காபி பொடி விற்பனை செய்பவர் ரூபாவிஸ்வநாதன், 65. இவர், சில மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக, மனவிரக்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம், காபிபொடி கடையில், முதியவர் ரூபாவிஸ்வநாதன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். புங்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X