பொது செய்தி

இந்தியா

நாட்டில், 3.54 லட்சம் பேர் பாதிப்பு ஒரே நாளில் 2,003 பேர் பலி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

புதுடில்லி: நாட்டில், கொரோனா வைரசால், 3.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த, 24 மணி நேரத்தில், 2,003 பேர் இறந்துள்ளனர்.

நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அதிகரித்து வருவதுடன், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, சுகாதார அமைச்சகத்தின் நேற்றைய அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 10 ஆயிரத்து, 974 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மூன்று லட்சத்து, 54 ஆயிரத்து, 65 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 445 பேருடன், மஹா., தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, தமிழகத்தில், 48 ஆயிரத்து, 19 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஒரு லட்சத்து, 55 ஆயிரத்து, 227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 934 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோரின் விகிதம், 52.79 சதவீதமாக உயர்ந்துள்ளது.நாட்டில், தொடர்ந்து ஆறாவது நாளாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா வைரசால், கடந்த, 24 மணி நேரத்தில், 2,003 பேர் இறந்து உள்ளனர். மஹா.,வில், கடந்த, 24 மணி நேரத்தில், 1,409 பேர் இறந்துள்ளனர். இது, மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கையை, 5,537 ஆக உயர்த்தியுள்ளது.டில்லியில், 437 பேருடன், இறந்தோர் எண்ணிக்கை, 1,837 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 49; குஜராத்தில், 28; உ.பி., மற்றும் ஹரியானாவில் தலா 18; ம.பி.,யில் 11; மே., வங்கத்தில், 10 பேரும் இறந்துள்ளனர்.இதையடுத்து, நாட்டில் வைரசால் பலியானோர் எண்ணிக்கை, 11 ஆயிரத்து, 903 ஆக அதிகரித்து உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X