சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்கள்; கருப்பு சட்டை போராட்டம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சிதம்பரம் : சிதம்பரம் அம்பலத்தாடி மடத் தெருவில் உள்ள ரேஷன் கடையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் துரைசேகர், மாவட்ட துணைத்தலைவர் நரசிம்மன், நகர பொறுப்பாளர்கள் யோகராஜ், கனகசபை, தட்சிணாமூர்த்தி, சுரேஷ் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். அதே போல் கடலுார் மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் ஊழியர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து பணிபுரிந்தனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியம் கூறுகையில், நியாய விலைக் கடை பணியாளர்களை உடனடியாக தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மே, ஜூன் மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ரேஷன் கடைக்கு வழங்கும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். நியாயவிலை கடை பணியாளர்களிடம் இறக்கு கூலி வசூலிக்க கூடாது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும் நேற்று முதல் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். எனவே நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு தீர்வு காணவேண்டும் என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X