தமிழ்நாடு

எகிறியது! ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று...மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement
 எகிறியது! ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று...மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

சென்னையில் இருந்து வருபவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கடலுார் மாவட்டத்தில் தொற்று கடுமையாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 95 பேருக்கு தொற்று உறுதியாகியது. இதில், 51 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 20 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த மூவர், ஒரிசாவில் இருந்து வந்த 6 பேர், கேரளா, கர்நாடகா மற்றும் டில்லியில் இருந்து வந்த தலா ஒருவர் உட்பட வெளியில் இருந்து மாவட்டத்திற்குள் வந்த 85 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியது. மேலும், கடலுார் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 13 மருத்துவ பணியாளர்கள், ஒரத்துார், புவனகிரியை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் இருவர், கடலுார், புவனகிரி, காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த தலா ஒருவர் வீதம் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என, நேற்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.

இதனால், கடலுார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே மூவர் உயிரிழந்த நிலையில், தொற்றும் அசுர வேகத்தில் பரவி வருவதால், மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. எல்லைகளில் உஷார்சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தொற்று அதிகரிப்பதால், கடலுார் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே 11 சோதனை சாவடிகள் உள்ள நிலையில், மாவட்ட எல்லையில் உள்ள சின்னகங்கணாங்குப்பம், கண்டரக்கோட்டை, தொழுதுார் நெடுஞ்சாலை, விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை, பண்ருட்டி அடுத்த நத்தம் ஆகிய 5 இடங்களில் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டு, வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உமிழ்நீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

வழக்கு பதிவு கலெக்டர் அன்புச்செல்வன் கூறுகையில், சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் அதிக அளவில் தொற்று பரவுகிறது. வெளியில் இருந்து வருபவர்கள் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதுடன், மற்றவர்களுக்கு நோய் பரவாமலும் தடுக்க முடியும். தவறான தகவல் கொடுத்து பாஸ் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு ஏற்படுத்திக்கொடுக்கும் இடத்தில் தனிமையில் இருக்க விரும்பாதவர்கள், தனியார் விடுதிகளில் பணம் கொடுத்து தங்கவும் அனுமதிக்கப்படுவார்கள். வியாபாரிகள் வருமானத்தை மட்டும் பார்க்க கூடாது, தங்களிடம் பணிபுரியம் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, கொரோனா மேலாண்மை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X