புதிய மேல்நிலைத் தேக்கத்தொட்டி சிதம்பரம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய மேல்நிலைத் தேக்கத்தொட்டி சிதம்பரம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

Added : ஜூன் 17, 2020
Share
சிதம்பரம் : உசுப்பூர் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை எம்.எல்.ஏ., பாண்டியன் துவக்கி வைத்தார். சிதம்பரம் அடுத்த உசுப்பூர் ஊராட்சியில் விபீஷ்ணபுரம் பகுதியில் 21.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர்

சிதம்பரம் : உசுப்பூர் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை எம்.எல்.ஏ., பாண்டியன் துவக்கி வைத்தார்.

சிதம்பரம் அடுத்த உசுப்பூர் ஊராட்சியில் விபீஷ்ணபுரம் பகுதியில் 21.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர் சுந்தர், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ், பா.ம.க., மாவட்ட துணை செயலாளர் சஞ்சீவி, சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தென்றல்மணி வரவேற்றார். சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீர் வழங்கி துவக்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பாசறை ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், நிர்வாகிகள் பாக்கியராஜ், ஜெயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X