சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டேஷனுக்கு சென்ற கொரோனா பாதித்த நபர் தெரித்து ஓடிய போலீசாரால் திடீர் பரபரப்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சிதம்பரம் : சிதம்பரம் நகர போலீ ஸ்டேஷனுக்கு கொரோனா பாதித்தவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஸ்டேஷன் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சிதம்பரம் தேவதாஸ் நகரை சேர்ந்த, 57; வயது நபர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று திரும்பியுள்ளார்.

இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பின் சுகாதாரத்துறையினர் போலீசாருக்கு விபரங்களை தெரிவித்து அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இதன்படி நேற்று அவரை அழைத்து செல்ல சிதம்பரம் நகர போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல் அறிந்த அந்த நபர் எதற்காக போலீசார் வந்தனர் எனத் தெரியாமல் பதட்டத்துடன் நேற்று காலை சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு சென்ற அவரை அங்குள்ள போலீசார் அமர வைத்தனர்.போலீசார் தேடிய கொரோனா பாதித்த நபர் என தெரியவந்தது.

இதனால் அருகில் இருந்த போலீசார் தெரித்து ஓடினர். உடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் உடனடியாக கிருமி நாசினி கொண்டு அவர் வந்த வழியில் இருந்து அமர்ந்த இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தப்படுத்தினர்.இதனால் சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் திடீர் பரபரப்பு தொற்றியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X