சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் குறித்து வாட்ஸ்ஆப்பில் அவதுாறு ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் கைது

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

பண்ருட்டி : மேல்குமாரமங்கலத்தில் அமைச்சரை காணவில்லை என வாட்ஸ்அப்பில் அவதுாறு பரப்பிய ஊராட்சிமன்ற தலைவரின் கணவரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் மகாலட்சுமி. இவரது கணவர் பாலாஜி. இதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 2 ம்தேதி வாட்ஸ்ஆப்பில் அமைச்சர் சம்பத்தை காணவில்லை என அப்பகுதி குழுவில் பதிவிட்டிருந்தார். இது குறித்து அமைச்சர் சம்பத்தின் அக்கா மகன் ரஜினி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து பாலாஜியை தேடி வந்தனர்.இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பாலாஜி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து நேற்று பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் பாலாஜியை, 40; கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X