200 பயங்கரவாதிகளை விடுவிக்க பெஷாவர் ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெஷாவர்: பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட, 200 பயங்கரவாதிகளை விடுவிக்க, பெஷாவர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பாகிஸ்தானில், 200 பேருக்கு, ராணுவ நீதிமன்றங்கள் தண்டனை விதித்தன.இதில் சிலருக்கு மரண தண்டனையும், சிலருக்கு ஆயுள் தண்டனையும், சிலருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தன.இந்த தண்டனையை எதிர்த்து இவர்கள், பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை மீதான விசாரணை, தலைமை நீதிபதி, வக்கார் சேத், நீதிபதி நீம் அன்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

பயங்கரவாதிகள், 200 பேரையும் விடுவதலை செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் கூறியதாவது:இவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கு, உறுதியான ஆதாரங்கள் இல்லை. சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, இவர்களுக்கு ராணுவ நீதிமன்றங்கள் தண்டனை வழங்கியுள்ளன. அத்துடன், விசாரணையும், பாரபட்சமின்றி நடக்கவில்லை. தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தண்டனையை ரத்து செய்து, 200 பேரையும் விடுவிக்க உத்தரவிடுகிறோம்.இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
18-ஜூன்-202011:09:15 IST Report Abuse
RajanRajan கஸ்மீர் ஊடுருவல் தீவிரவாதிகளின் இழப்பை இவிங்க கோர்ட் சமன் செய்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X