சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த தண்டேஸ்வரநல்லுாரில் புதிய சாலை அமைப்பதற்கான பணி துவக்கி 20 நாட்களுக்கு மேலாகியும் சாலை பணி நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடி ஊராட்சி தண்டேஸ்வரநல்லுார் செல்லும் சாலை 2 கிலோ மீட்டர் துாரமுள்ளது.இங்கு புதிய சாலை அமைப்பதற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாலை பணி துவங்கப்பட்டது. ஆனால் இது நாள்வரை சாலை பணி நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நடந்து செல்லும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கிராமத்தில் அவசரத்தேவைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ், பால் வண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே தண்டேஸ்வரநல்லுார் சாலை பணியை விரைவில் துவங்கி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X