கொரோனா நிதியை தேசிய பேரிடர் நிதியத்தில் சேர்க்க கோரிய வழக்கு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

புதுடில்லி: பிரதமரின் கொரோனா நிவாரண நிதியை, தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் சேர்க்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு, இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில், கொரொனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட, 'பி.எம்., கேர்ஸ்' என்ற நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சி.பி.ஐ.எல்., என்ற தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:பி.எம்., கேர்ஸ் நிதியத்தில் கோடிக்கணக்கில் நன்கொடை குவிகிறது.

ஆனால், இதுவரை சேர்ந்த தொகை மற்றும் செலவினம் குறித்த விபரங்களை வழங்க, மத்திய அரசு மறுக்கிறது. எனவே, இந்த நிதியத்தில் சேர்ந்துள்ள தொகையை, தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் சேர்க்க வேண்டும். மத்திய அரசு, கொரோனா பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படி, நாடு தழுவிய சீரான செயல் திட்டத்தை அறிவிக்க தவறிவிட்டது. மாநில அரசுகள் மற்றும் வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, அத்தகைய செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கும், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, கடும் நெருக்கடிக்கு ஆளாகியவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கைகள் குறித்து, இரு வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என, அமர்வு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X