சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று 1,800 நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தன.

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நெல், எள், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.ஊரடங்கு காரணமாக கமிட்டி மூடப்பட்டதால், விவசாயிகள் சிரமமடைந்தனர். அதன்பின், மார்க்கெட் கமிட்டிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வழக்கம்போல இயங்க துவங்கின.அறுவடையான நெல், உளுந்து, எள் உள்ளிட்ட விளை பொருட்கள் சமீபகாலமாக விற்பனைக்கு வந்த நிலையில், நேற்று கொள்முதல் அதிகரித்தது.

அதன்படி, நெல் 1,800 மூட்டைகள், எள் 550 உட்பட 2,817 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.அதில், தேங்காய் பருப்பு 8,849 ரூபாய்க்கும், எள் 7,910, வேர்க்கடலை 6,639, உளுந்து 6,499 மற்றும் நெல் வகையில் பி.பி.டி., 1,760 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X