சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதித்தவரின் குடும்பத்தினர் வெளியே சென்று வருவதால் மக்கள் அச்சம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கொரோனா தொற்று உறுதியானவரின் குடும்பத்தினர் பொது இடங்களில் நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னையிலிருந்து ஊர் திரும்பிய நெல்லிக்குப்பம் திரு.வி.க., தெருவை சேர்ந்த 35 வயது வாலிபருக்கு தொற்று உறுதியானது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்து, முடிவு வராத நிலையில் அவரது குடும்பத்தினர் பொது இடங்களுக்கு வந்து செல் கின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கும் கொரோனா தொற்று பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மாவட்டத்தில் தொற்று குறைவாக இருந்த ஆரம்ப நிலையில், போலீசார் கண்காணிப்பு கடுமையாக இருந்தது.

தற்போது மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதித்த திரு.வி.க., தெருவில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் கண்காணிப்பு அதிகம் இல்லை. அந்த தெருவுக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்ததோடு பணி முடிந்ததாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.தொற்று உறுதியானவரின் வீட்டில் இருந்து 50 மீட்டர் துாரத்திலேயே வங்கி, ரேஷன் கடை உள்ளது. இதை கூட கண்காணிக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் கட்டுப்பாடுகளை தீவிரபடுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X