கடலுார் வாகனங்கள்; புதுச்சேரி எல்லையில் நிறுத்தம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் வாகனங்கள்; புதுச்சேரி எல்லையில் நிறுத்தம்

Added : ஜூன் 17, 2020
Share

கடலுார் : புதுச்சேரி முதல்வர் உத்தரவால், கடலுார் மார்க்கமிருந்து செல்லும் தமிழக பகுதி வாகனங்கள் மாநில எல்லையான முள்ளோடையிலேயே போலீசார் திருப்பி அனுப்பினர்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக பகுதிகளை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இ--பாஸ் மற்றும் முக்கிய அவசர தேவைகளுக்கான பாஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே, அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்வதால் இ-பாஸ் வைத்திருந்தாலும், மருத்துவ சிகிச்சை தவிர வேறு யாரையும் புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டாம் என, முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று புதுச்சேரி எல்லையான முள்ளோடையில், கடலுார் மார்க்கமிருந்து சென்ற வாகனங்களை உள்ளே விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X