சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேலவாரி தடுப்பணையைசீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

பெண்ணாடம் : பெ.பூவனுாரில் சேதமடைந்துள்ள மேலவாரி தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுார் - காரையூர் இடையே பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக நுாறு ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி உள்ளது.இந்த ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் மேல வாரியின் குறுக்கே உள்ள தடுப்பணை வழியாக சென்று பெ.பூவனுார், ஓ.கீரனுார், காரையூர், வெண்கரும்பூர் கிராம விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுகிறது. போதிய பராமரிப்பின்றி உள்ள தடுப்பணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையின் போது சேதமடைந்தது. இதுவரை தடுப்பணை சீரமைக்கப்படாததால் வெளியேறும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது.

எனவே, சேதமடைந்த மேலவாரி தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X