சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன சோதனையில் 4 பைக்குகள் பறிமுதல்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

புவனகிரி : புவனகிரியில் ஒரே வீட்டில் இரு விலை உயர்ந்த பைக்குகளை திருடிய பலே ஆசாமிகள் போலீசாரின் வாகனச் சோதனையில் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ. 4. 25 லட்சம் மதிப்புள்ள 4 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கீழ்புவனகிரி சின்னப்பா முதலித்தெரு சாதிக்பாஷா மகன் முபாரக்பாஷா,18: அவர் வீட்டிற்கு விருந்தினராக வந்த திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் லால்குடி முகம்மது அசத்துல்லா மகன் நியமத்துல்லா25: இவர்கள் இருவரின் விலை உயர்ந்த பைக்குகளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தனர். காலையில் பார்த்த போது பைக்குகளை காணவில்லை.இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து பைக்குகளை திருடிய மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று புவனகிரி பங்களா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போலீசாரை கண்டு தப்ப முயன்ற இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் , சிதம்பரம்,பொய்யாப்பிள்ளை சாவடி சிவசக்திநகர் மாதவன் மகன் பிரபு, 24: வேலுார் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகர் மதி மகன் சூர்யா,20: என்பதும், கீழ்புவனகிரியில் 2 பைக்குகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதை தொடர்ந்து போலீசார் பிரபு, சூர்யா இருவரையும் கைது செய்தனர். திருடிய விலை உயர்ந்த பைக்குகளை குடியாத்தத்தில் மறைத்து வைத்தது தெரிந்தது. ரூ. 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நான்கு பைக்குளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X