மாற்று கட்சியினர் 300 பேர் பா.ஜ.,வில் ஐக்கியம் ஆயிரம் பேருக்கு தென்னங்கன்றுடன் உதவிகள் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்று கட்சியினர் 300 பேர் பா.ஜ.,வில் ஐக்கியம் ஆயிரம் பேருக்கு தென்னங்கன்றுடன் உதவிகள்

Added : ஜூன் 17, 2020
Share

புவனகிரி : புவனகிரிஅருகே சாத்தப்பாடியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய 300 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்டத் தலைவர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

பா.ஜ., தேசியத் தலைவர் நட்டார்ஜி., மாநிலத் தலைவர் முருகன் உத்தரவின் பேரில் பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்டத் லைவர் இளஞ்செழியன் ஆலோசனையின் பேரில் கட்சியினர் ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு பல்வேறு நடத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.கடலுார் மேற்கு மாவட்டம் புவனகிரி அடுத்த சாத்தப்பாடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுக் கட்சியினர் பா.ஜ., வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.தொழிலதிபர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் அருள் வரவேற்றார்.

மாவட்ட துணைத் தலைவர் வெற்றிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் வைரக்கண்ணு, மாவட்ட செயலர் வேல்முருகன், ஒன்றிய செயலர் ராமநாதன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் இளஞ்செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் சாய்சுரேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குமார் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளுடன், ஆயிரம் பேருக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர். பல்வேறு கட்சியில் இருந்து விலகி 300க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ., வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்குமார்,தவபாலன், இளைஞரணி ராமதாஸ்,கட்சி நிர்வாகிகள் திரிசங்கு,கோபாலகிருஷ்ணன், கொளஞ்சியப்பன், சின்னையன்,சேகர், ராஜேஷ் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X