சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதித்தோர் அதிகரிப்பு விருதை அதிகாரிகள் அதிர்ச்சி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாநிலத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது. இதனால் வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் தவித்த பலரும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பினர்.அதில், அதிகம் பாதித்த மஹாராஸ்டிரா மாநிலம் மும்பை, குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு படையெடுக்கத் துவங்கினர். அவர்கள், எந்தவித பரிசோதனையும் செய்து கொள்ளாமல், வீடுகளில் தஞ்சமடைந்ததால், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது.அதன்படி, மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரும்பியவர்கள், விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள அரசு கல்லுாரி மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில், நேற்று முன்தினம் இரவு வரை, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உட்பட 33 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அவர்கள் அனைவரும், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வரும் நிலையில், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X