சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாம்பலம் ஆய்வாளர் உயிரிழப்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

தி.நகர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை, மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக பணி புரிந்து வந்தவர், பாலமுரளி, 47. வேலுாரைச் சேர்ந்த இவர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், வடபழநி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.இவர், 2000ல், தமிழ்நாடு காவல் துறையில், உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.தற்போது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், காய்ச்சலால் அவதிப்பட்டு, 3ம் தேதி, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இதையடுத்து, 5ம் தேதி அவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கிண்டி ஐ.ஐ.டி.,யிலும், தொடர்ந்து, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் அதிகமாக இருந்தது. இதையடுத்து, 9ம் தேதி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 13ம் தேதி, அவரது உடல் நிலை ஆபத்தான நிலைக்கு சென்றது.

இதையடுத்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தன் சொந்த செலவில், 2 லட்சம் ரூபாய் விலையுள்ள, உயிர் காக்கும் ஊசி மருந்தை, வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொடுத்தார். மேலும், அவரது உடல் நிலையை, தனியாக மருத்துவக் குழு ஒன்றும் கவனித்து வந்தது. இருந்தும், பாலமுரளியின் உடல் நிலை நேற்று கவலைக்கிடமானது. அவர், தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை உயிரிழந்தார். அவரது மரணம், காவல் துறையினர் மத்தியில், பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X