சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எண்ணுாரில் ரவுடி வெட்டி கொலை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

எண்ணுார் : எண்ணுாரில், ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்தவர் சின்னமுத்து, 45. ரவுடியாக வலம் வந்த இவர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.நேற்று முன்தினம் இரவு, எர்ணாவூர், காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றார். அப்போது, இரண்டு ஆட்டோக்களில் வந்த, 10 பேர் கும்பல், சின்னமுத்துவை, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால், சரமாரியாக வெட்டி, தப்பினர்.நிலை குலைந்து சரிந்த சின்னமுத்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

எண்ணுார் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில், கொலையாளிகள் தவற விட்ட கத்திகள், பறிமுதல் செய்யப்பட்டன.மாதவரம் துணை ஆணையர் ரவேளி பிரியா, சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணையை முடுக்கி விட்டார்.கொலையான சின்னமுத்துவிற்கும், ரவுடி நாகராஜ் என்பவருக்கும், ஓராண்டாக முன் விரோதம் இருந்துள்ளது.

சில தினங்களுக்கு முன், கட்டத்தொட்டி ஒன்றில், 1,000 ரூபாய் மாமூல் பெறுவதில், இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில், ஆத்திரமடைந்த நாகராஜ், தன் கூட்டாளிகளுடன், ஆட்டோக்களில் வந்து, சின்னமுத்துவை வெட்டி கொலை செய்து தப்பியது, விசாரணையில் தெரியவந்தது.இது தொடர்பாக, எர்ணாவூரைச் சேர்ந்த, தங்க முத்து, 21, என்பவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.இச்சம்பவத்தால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X