பொது செய்தி

தமிழ்நாடு

கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தை சேர்ந்த வீரதீர செயல் புரிந்த பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:2020 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது. தைரியம் மற்றும் துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும்.நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்விருது சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை--600 084 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். வரும் 26ம் தேதி கடைசி நாள் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு 04142 -220590, 7401703495 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்படி விருது பெறுவதற்கு கடலுார் மாவட்டத்திலுள்ள வீர, தீர செயல்புரிந்த பெண்கள் பயன்பெறலாம் என, கலெக்டர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X