தமிழ்நாடு

' பறக்கும் படை அபராதம் விதிக்கும்

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ' பறக்கும் படை அபராதம் விதிக்கும்

அடையாறு : முக கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு அபராதம் விதிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில், தொற்று பரவலை தடுக்க, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கிய நடவடிக்கையாக, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.முக கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார், 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். இந்நிலையில், நடந்து செல்வோர் அனைவரும், முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த, மாநகராட்சி மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம், அடையாறு மண்டல அலுவலகத்தில் நடந்தது. தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், அடையாறு காவல் மாவட்டத்தில் உள்ள, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.ஒரு இளநிலை பொறியாளர், இரு ஊழியர்கள் மற்றும் ஒரு காவல் உதவி ஆய்வாளர், இரு காவலர்களுடன் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள், வார்டுதோறும் பெரிய, சிறிய தெருக்களில், நடந்து மற்றும் வாகனங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிப்பர். அபராதம் செலுத்தவில்லை என்றால், வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த நடவடிக்கை, நேற்று முதல் துவங்கியது.அதோடு, இதே பறக்கும் படை, வீட்டு தனிமையில் இருக்காமல் ஊர் சுற்றுவோரை, தனிமை முகாமில் சேர்க்கும் நடவடிக்கையும் எடுப்பர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-202005:54:39 IST Report Abuse
ஆப்பு அரிசிக் கார்டு ஆளா இருந்தா உட்டுருங்க. மத்தவங்க எல்லோரும் லட்சாதிபதிகள். அவிங்களை புடியுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X